V4U MEDIA [ Sat, Mar 07, 2020 ]
522 |
மலைவாழ் மக்களின் இருப்பிடத்தை காலி செய்து விட்டு, அந்த இடத்தை தனக்கு சொந்தமாக நினைக்கிறார்கள் அரசாங்க அதிகாரிகளும், மந்திரிகளும். ஆனால் மக்கள் இது எங்கள் இடம் காலி செய்ய முடியாது என்று போராட்டம் செய்கிறார்கள். இதனால் ஆத்திரமடைந்த உயர் அதிகாரிகள் இடத்தை தீயிட்டு கொளுத்திகார்கள். இந்த சம்பவத்தை யார் செய்தார்கள் என்ற ஆதாரத்தை தயார் செய்கிறார் நடிகையும், சமூக ஆர்வலருமான கஸ்தூரி. இந்த ஆதாரத்தை பத்திரிகையாளர் வரலக்ஷ்மி கிட்ட கொடுக்க முடிவு செய்கிறார். அந்த நேரத்தில் மர்ம நபர்களால் கஸ்தூரி கொல்லப்படுகிறார். கஸ்தூரியை யார் கொலை செய்தார் ? இடத்தை மீட்டு மலைவாழ் மக்களுக்கு வரலக்ஷ்மி கொடுத்தாரா என்பதே படத்தின் மீதிக்கதை.
வரலெட்சுமி க்கு நல்ல கதாபாத்திரம். வரலெட்சுமியின் முழுத்திறமையையும் இயக்குநர் பயன்படுத்தவில்லை என்றே தெரிகிறது. ஒரு சில காட்சிகளில் வந்தாலும் கவனம் ஈற்கிறார் கஸ்தூரி. ரமேஷ் திலக் நல்ல பெர்பாமன்ஸ் காட்டியுள்ளார்.
படத்தின் பெரும்பாலான காட்சிகள் இருட்டில் நடக்கிறது அதை மிகவும் நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்துள்ளார் பகத் குமார்.
அச்சு ராஜுமணி இசையில் பாடல்கள் மற்றும் சரண் ராஜனின் பின்னணி இசை ஓகே ரகம். திரைக்கதையை இன்னும் நன்றாக எழுதிருக்கலாம்.
Kasthuri - Best Actress In Supporting Role
1 Votes
Thilak Ramesh - Best Actor in a Supporting Role
1 Votes