V4U MEDIA [ Tue, Jul 07, 2020 ]
772 |
காதலை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு எப்போதும் கிடைக்கும். ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு முறையாக காதலை மென்மையாக வெளிப்படுத்தும் போது நாம் அதை ரசிக்கிறோம். அதே போல் காதலை மையமாக வைத்து சமீபத்தில் வெளியான படம் "சுஃபியும் சுஜாதாவும்" .
இந்த படத்தில் ஜெயசூர்யா (ராஜிவ் நாயர்), அதிதி ராவ் (சுஜாதா), தேவ்(சூஃபி) ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கதை தற்போது காலகட்டத்தில் இருந்து சுமார் பத்து வருடங்களுக்கு முன்புள்ள பிளாஷ்பேக். வாய் பேச முடியாத பெண்ணாக இருக்கும் சுஜாதாவுக்கு சுஃபியை பார்த்தவுடன் அவர் மீது ஒருவித ஈர்ப்பு ஏற்படுகிறது. காலப்போக்கில் இருவரும் காதலிக்க ஆரம்பிக்கின்றனர். அதேசமயத்தில் சுஜாதாவுக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்து வருகிறார்கள். பெற்றோர்களின் சொல்லை தட்ட முடியாத சுஜாதா வேறு வழியின்றி காதலனை புறக்கணித்து விட்டு வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டு துபாயில் செட்டில் ஆகிறார்.
பிளாஷ்பேக் முடிந்து கதை தற்போது காலகட்டத்தில் கதை செல்கிறது. சூஃபி மாரடைப்பால் இறந்து போகிறான். இதை கேள்விப்பட்டு அதிர்ந்து போன சுஜாதா தனது முன்னாள் காதலனின் உடலை காண தனது கணவருடன் இந்தியா வருகிறார். சுஜாதா தன் கணவன் ராஜீவுடன் சூஃபியைக் காண வருகிறாள். அங்கு நடக்கும் நிகழ்வுகள் தான் மீதி படத்தின் கதை.
ஒரு அழகிய நாவலை படிப்பது போன்ற ஒரு நல்ல அழகான அனுபவத்தை இந்த படம் நமக்கு கொடுக்கின்றது. படத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம் என்றே கூறலாம். பிளாஷ்பேக் காட்சிகளை அவ்ளோ அழகாக ஒளிப்பதிவு செய்துள்ளார் அனு மோதிதத். படம் கொஞ்சம் ஸ்லோ, திரைக்கதையை இன்னும் விறுவிறுப்பாக எழுதியிருக்கலாம். காதல் படங்களை விரும்பி பார்க்கும் சினிமா விரும்பிகளுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.
Aditi Rao - Best Actress
1 Votes
Anu Moothedath - Best Cinematographer
1 Votes