V4U MEDIA [ Tue, Nov 19, 2019 ]
சங்கத்தமிழன் விமர்சனம்
விஜய் சேதுபதி நடிப்பில் விஜய் சந்தர் இயக்கத்தில் சங்கத்தமிழன் படம் திரையரங்கில் வெளியாகி வெற்றி நடைபோடுகிறது. இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு ராஷிகன்னா, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் ஜோடியாக நடித்துள்ளனர் . இவர்களுடன் சூரி, நாசர், அசுதோஷ் ராணா, ரவி கிஷன், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய் மற்றும் ஸ்ரீமன் போன்ற மிக பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து உள்ளார்கள். இத்திரைப்படத்தினை விஜயா புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்து உள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் விவேக் மற்றும் மெர்வின் அவர்கள் இசை அமைத்து உள்ளார்கள். சங்கத்தமிழன் படத்திற்கு ஒளிப்பதிவாளர் வேல் ராஜ். மேலும், ப்ரவீன் எடிட்டிங் செய்து உள்ளார். மேலும்,இந்த சங்கத் தமிழன் படம் முழுக்க முழுக்க அரசியல் மற்றும் அதிரடி, ஆக்ஷன் படமாக உருவாகி உள்ளது.
கதைக்களம்:
சங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதி ‘சங்கத்தமிழன்,முருகன்’ என்ற இரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த அளவிற்கு அவருடைய ஆக்ஷன் இந்த படத்தில் காட்டியுள்ளார். மேலும்,இந்த படத்தில் மண்ணுக்கு ஒண்ணுன்னா உயிரை கொடுப்பேன் என்பதற்கு ஏற்றவாறு விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் உள்ளது. இந்த படத்தில் முருகன் மற்றும் சங்கத்தமிழன் என்ற இரண்டு கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார் .
முருகன் என்பவர் சென்னையில் வாழ்பவர். மேலும், இவர் சினிமாவில் ஹீரோவாக நடிக்கிறார். மேலும், சங்கத்தமிழன் என்பவர் கிராமத்தில் வாழ்பவர். இந்நிலையில் முருகன் என்பவர் சென்னையில் மிகப்பெரிய இந்நிலையில் சஞ்சய் என்பவரின் மகளை காதலிக்கிறார். மேலும்,தொழிலதிபர் மகள் தான் ராசி கண்ணா. அப்போது அந்த தொழிலதிபர் முருகனை தீர்த்துக்கட்ட வருகிறார். அப்போது முருகனை பார்க்கும் போது தான் தன்னுடைய பழைய எதிரியான சங்கத் தமிழன் ஞாபகத்துக்கு வருகிறது. ஏன் என்றால் முருகன்,சங்கத்தமிழன் ஆகிய இரண்டு பேருடைய முகமும் ஒரே மாதிரி இருக்கு. அப்போது தான் படத்தின் கதையே தொடங்குகிறது.
மேலும், சங்கத் தமிழன் யார்? அவருக்கும் அந்த தொழிலதிபர் சஞ்சய்க்கும் என்ன பிரச்சனை? என்று கதை (இரண்டாம் பாகம்) தொடங்குகிறது. சங்கத்தமிழன் ஒரு கிராமத்து சிங்கம் தொடங்குகிறது. சீறி இருப்பவர். தன்னுடைய கிராமத்தில் சஞ்சய் அவர்கள் காப்பர் ஃபேக்டரி ஒன்றைச் ஆரம்பிக்க வருகிறார். அந்த காப்பர் கம்பெனியை வைக்கக்கூடாது என்று எதிர்த்து நிற்கிறவர் தான் சங்கத்தமிழன். இதனால் இவர்களுடைய மோதல் தொடங்குகிறது. அதுமட்டுமில்லாமல் காப்பர் தொழிலால் நிறைய நஷ்டமடைந்த தொழிலதிபர் சஞ்சய் முருகனை வைத்து படமெடுக்க திட்டமிடுகிறார்.
பின் முருகனுக்கும் தொழில் அதிபருக்கும் இடையே பிரச்சினை எப்படி முடிகிறது. அதோடு சங்கத்தமிழன், முருகன் இருவரும் சேர்ந்து அந்த தொழிலதிபரை என்ன செய்கிறார்கள்? என்பது தான் தொழிலதிபரை சுவாரசியமே. மேலும், சங்கத்தமிழன், முருகன், தொழிலதிபர் சஞ்சய் மூவருக்கும் இடையே என்ன நடக்கிறது என்பது தான் மீதி கதை. மேலும், இந்த படம் முழுக்க முழுக்க கமர்ஷியல் படமாக வந்துள்ளது. இந்தப் படத்தில் நடிகர் சூரி விஜய் சேதுபதி காம்பினேஷன் நன்றாக உள்ளது.
சங்க தமிழன் படம் ஒரு “கம்ப்ளீட் ஃபேமிலி பேக்கேஜ்” ஆகும். நடிகை ராசி கண்ணா வரும் காட்சிகள் ரசிகர்கள். நடிகை சிறப்பாகவும் அழகாகவும் இருந்தது. படத்தின் மிகப்பெரிய பக்கபலம் விவேக் -மேர்வின் இசையும் பாடல்களும் தான்.