V4U MEDIA [ Sat, May 30, 2020 ]
597 |
நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ராஜசேகர பாண்டியன் தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள படம் 'பொன்மகள் வந்தாள்'. அறிமுக இயக்குனர் ஜெ.ஜெ.பெட்ரிக் எழுதி இயக்கி உள்ளார். முதல்முறையாக ஜோதிகா இப்படத்தில் வக்கீலாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் பாக்கியராஜ், பார்த்திபன், தியாகராஜன், பிரதாப போத்தன், பாண்டியராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்த் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.
2004ல் ஊட்டியில் ஜோதி என்ற பெண் குழந்தையை கடத்தி செல்லும் போது 2 இளைஞர்களை கொலை செய்துவிட்டு தப்பிக்க முயலும் போது போலீஸ் அவரை என்கவுண்டர் செய்கிறார்கள். முடிந்து போன வழக்கை 15 வருடங்கள் கழித்து பாக்யராஜ் உதவியுடன் தூசி தட்டி எழுப்புகிறார் ஜோதிகா. அந்த குற்றங்களை செய்தது யார் ? ஜோதிக்கும் ஜோதிகவிற்கும் என்ன தொடர்பு ? பின்னணியில் யார் உள்ளனர் ? தண்டனை வாங்கிக் கொடுத்தாரா? என்பது தான் இந்த படத்தின் கதை.
மொத்த கதையையும் தன் தோளில் நடிகை ஜோதிகா சுமந்துள்ளார் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு நடிப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். மிக இயல்பாக நடித்து அனைவரின் பாராட்டையும் அள்ளி செல்கிறார். ஜோதிகவிற்கு அடுத்தபடியாக நடிகர் பார்த்திபன் நடிப்பு பாராட்டுக்குரியது. வழக்கம் போல தனது நக்கலான வசனங்களால் கை தட்டல் வாங்குகிறார். நீதிமன்றத்தில் ஜோதிகவுடன் வாதாடும் காட்சிகளில் இருவரும் போட்டி போட்டு ஸ்கோர் செய்கின்றனர். பாக்கியராஜ், பாண்டியராஜன், பிரதாப் போத்தன், தியாகராஜன் ஆகியோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட ரோலை அழகாக செய்துள்ளனர். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையில் ஓகே ரகம் தான் என்றாலும் பின்னணி இசையில் சிறப்பாக செயல்பட்டுள்ளார்.
ஊட்டியின் அழகு மற்றும் குளுமையை கண்முன்னே நிறுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் ராம்ஜி. எடிட்டர் ரூபன் தனது பங்கை சரியாக செய்துள்ளார். படத்தில் வரும் பல ட்விஸ்ட்கள் யூகிக்கும்படி அமைந்துள்ளது குறிப்பாக இடைவேளை ட்விஸ்ட் ஆனால் கிளைமாக்ஸ் திருப்பம் கண்டிப்பாக பார்வையாளர்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.