V4U MEDIA [ Sat, Feb 22, 2020 ]
702 |
பணக்கார வீட்டு பையனும், ஏழை வீட்டு பெண்ணும் காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டு ஊரை விட்டு ஓடி போய் வேறு ஊரில் பிழைக்கிறார்கள். ஓடி வந்த ஜோடியை தேடி வந்து கொல்ல நினைப்பவர்களை ஹீரோ எப்படி சமாளித்தார் என்பதே மீதிக்கதை. போஸ் வெங்கட் இயக்குநராக அறிமுகமாகியுள்ள படம் இது. மிகவும் சென்சிடிவான கதைக்களத்தை மிக சுலபமாக கையாண்டுள்ளார் போஸ் வெங்கட்.
அறிமுக நடிகர்களான ஸ்ரீராம் கார்த்திக், விஷ்ணு ராமசாமி மிக சரியான தேர்வு. சாயா தேவி படத்தின் மிகப்பெரிய பலம் என்றே சொல்லலாம் அந்த அளவுக்கு முதல் படத்திலேயே தனது இயல்பான நடிப்பால் அனைவரையும் கவர்ந்துள்ளார்.
ஆடுகளம் முருகதாஸ், சூப்பர் குட் சுப்ரமணியன், ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா என அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்துள்ளனர். இனியன் ஹாரிஸ் ஒளிப்பதிவு பளிச். ஹரி சாய் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம், வசனம் இல்லாத இடத்தில் கூட தனது பின்னணி இசையால் அழ வைக்கிறார் இசையமைப்பாளர் ஹரி சாய்.
Bose Venkat - Best Debut Director
1 Votes
Sriram Karthick - Best Actor Debut
1 Votes
Vishnu Ramasamy - Best Actor Debut
1 Votes
Chaya Devi - Best Debut Actress
1 Votes
Adukalam Murugadoss - Best Actor in a Supporting Role
1 Votes
Super Good Subramaniyan - Best Actor in a Supporting Role
1 Votes
Priyanka Robo Shankar - Best Actress In Supporting Role
1 Votes