V4U MEDIA [ Sat, Dec 14, 2019 ]
150 |
படக்குழு: நடிகர்கள்: பரத், அன் ஷீட்டல், சுரேஷ் மேனன், ஆதவ் கண்ணதாசன் மற்றும் பலர்.
இசை: விஷால் சந்திரசேகர்
ஒளிப்பதிவு: சுரேஷ் பாலா
எடிட்டிங்: புவன் ஸ்ரீநிவாசன்
தயாரிப்பு: மணி தினகரன், சிவநேசன் & பார்கவி
இயக்கம்: ஸ்ரீ செந்தில்.
கதைக் களம்:
போலிஸ் அதிகாரியாக வரும் பரத்(காளிதாஸ்), ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் அடுத்தடுத்து நடக்கும் மூன்று தற்கொலைகள். குறிப்பாக இறந்த மூவருமே பெண்கள், ஒரே மாதிரியான சம்பவங்கள்! இது கொலையா? தற்கொலையா? என கண்டறிய களமிறங்கும் பரத் தலைமையிலான போலிஸ் குழு. இதற்கிடையே பரத் குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகள். இறுதியாக கொலைகளுக்கு யார்? என்ன காரணம்? என்பதே பரபரப்பு நிறைந்த கதைக் களம்.
விமர்சனம்:நீண்ட நாட்களுக்கு பிறகு பரத் சினிமா வாழ்கையில் ஒரு திருப்பு முனை இந்த காளிதாஸ். போலிஸ் அதிகாரியாக மிடுக்கிலும், நடையுடை பாவனை அப்படியே வெளிப்படுத்தியுள்ளார். படத்தின் பரபரப்பிற்கு ஏற்ப பரத்தின் நடிப்பு அருமை. வேலையையே கட்டி அழும் கணவரிடம்(பரத்) காதலை எதிர்ப்பார்க்கும்
மனைவியாக வரும் கதாநாயகி அன் ஷீட்டல், ஏக்கத்திலும் தவிப்பிலும் மேலும் பாதியில் ஏற்படும் மனநில பிரச்சனை என அனைத்திலும் நிறைவாக நடித்துள்ளார்.
சுரேஷ் சந்திர மேனன் நல்ல தேர்வு, நடிப்பு.
படத்தின் விறுவிறுப்பை மெருகேத்தியுள்ள சுரேஷ் பாலாவின் ஒளிப்பதிவு, விஷால் சந்திரசேகரின் இசை மற்றும் எடிட்டிங்(புவன் ஸ்ரீநிவாசன்). அறிமுக இயக்குனர் ஸ்ரீ செந்தில், நேர்த்தியான சப்ஜெக்டை கையிலெடுத்து, அதற்கேற்ற கதாபாத்திரங்களை வடிவமைத்து, குறைவான பட்ஜெட்டில் நல்லதொரு க்ரைம் மிஸ்ட்ரி த்ரில்லர் எக்ஸ்பீரியன்சை கொடுத்துள்ளார். வாழ்த்துக்கள்!!! படம் நடுவில் சிறிது மெதுவாக நகர்வது சற்று குறையாக தெரிகிறது, மற்றபடி க்ரைம் மிஸ்டரி
திரில்லர் ரசிகர்களுக்கு நல்லதொரு தீனியாக அமைந்துள்ளான் இந்த காளிதாஸ்.
Bharath - Best Actor
2 Votes
Sri Senthil - Best Director
1 Votes