V4U MEDIA [ Fri, Feb 28, 2020 ]
645 |
தமிழ்நாட்டில் உள்ள கிராமம் ஒன்றில் மருத்துவக் கழிவுகளையும் மற்றும் இறைச்சி கழிவுகளையும் அரசியல்வாதிகள் பணத்திற்காக குவிக்கின்றனர். கிராம மக்கள் கடும் வியாதியானால் பாதிக்கபடுகின்றனர். இறுதியில் கழிவுகள் கொட்டுவதை தடுக்க பட்டதா? கவுன்சிலர் என்ன ஆனார்? கிராம மக்கள் போராடினார்களா? ஜெயித்தார்களா ? என்பதே இப்படத்தின் மீதிக்கதை.
அறிமுக நாயகன் சிவா நிஷாந்த் சண்டைக் காட்சிகளிலும், நடனங்களிலும் முழு நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
கதாநாயகிகள் திவ்யா,சிவநிஷாந்த் இருவரும் தங்களுக்கு கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளனர்.
சிவநிஷாந்தின் அப்பாவாக நடித்திருக்கும் கஜராஜ் கவனிக்க வைத்திருக்கிறார். அப்புக்குட்டி, ராஜசிம்மன்,காக்காமுட்டை சசி ஆகியோர் நடிப்பால் கவர்கிறார்கள். ஜெய்கிரிஷின் இசையில் பாடல்கள் & பின்னணி இசை ஓகே ரகம். கிராமத்தின் எதார்த்ததை மிக அழகாக ஒளிப்பதிவு செய்துள்ளார் பி.வாசு.
சிறந்த கதை எழுதியுள்ள எஸ்.ஹரிஉத்ரா, திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். "அரசியல் பழகு" என்று சமுதாயத்துக்குத் தேவையான கருத்தை சொல்லியுள்ளார் இயக்குநர் எஸ்.ஹரி உத்ரா.
Antony - Best Actor
1 Votes
Gajaraj - Best Actor in a Supporting Role
1 Votes
Kakkamuttai Sasi - Best Actor in a Supporting Role
1 Votes