V4U MEDIA [ Thu, Nov 12, 2020 ]
254 |
படக்குழு:
நடிகர்கள்: வரலக்ஷ்மி சரத்குமார், வேல ராமமூர்த்தி, அனிதா சம்பத் மற்றும் பலர்.
இசை: சந்தோஷ் தயாநிதி, சாய் பாஸ்கர்
ஒளிப்பதிவு: அனந்த்குமார்
எடிட்டிங்: SN பாசில்
தயாரிப்பு: P.G. முத்தையா
இயக்கம்: சந்தானமூர்த்தி.
கதைக் களம்:
படத்தின் களமான தஞ்சாவூரில் இன்ஸ்பெக்டராக வரும் நாயகி வரலக்ஷ்மி சரத்குமார்(குந்தவை), தனது தங்கை அனிதா சம்பத்துடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அங்கு மர்மமான முறையில் எறித்து கொல்லப்படும் பெண், கதை ஆரம்பமாகிறது. அந்த பெண்ணின் கணவர் தான் எறித்து கொலை செய்திருப்பார் என சந்தேகத்துடன் விசாரனை தொடங்க, ஒருக் கட்டத்தில் வரலக்ஷ்மியின் தங்கை அனிதாவும் இதேபோல எறித்து கொல்லப்படுகிறார். இதற்கு பிறகு நடக்கும் திருப்பங்கள் என்ன? கொலையாளியை வரலக்ஷ்மி கண்டறிந்தாரா? என்பதே மீதிக் கதை.
விமர்சனம்:
மிடுக்கான போலீஸ் இன்ஸ்பெக்டராக கெத்தாக வரும் நாயகி வரலக்ஷ்மி, வழக்கமாக அவருக்கே உரித்தான ஆக்ஷனில் கலக்கியுள்ளார். படத்தின் ஒரே பலமாக இருப்பது வரலக்ஷ்மி மட்டும் தான். அதேபோல் மற்றொரு போலீஸ் அதிகாரியாக வரும் துரை சுதாகர் சற்று கவனிக்க வைக்கிறார். வில்லனாக வரும் வினோத் கிஷன் இதே பாத்திரத்தில் நிறையமுறை நாம் பார்த்து சலித்துவிட்டோம். அனிதா சம்பத், சிறிய கதாப்பாத்திரம் அழகாகநிறைவு செய்துள்ளார்.
பாடல்கள் பெரிதளவு கவரவில்லை என்றாலும் பின்னணி இசை கவனிக்கும்படி அமைந்துள்ளது. அனந்த்குமார் ஒளிப்பதிவு கூடுதல் பலம். இப்படம் மொத்தமே 1.30 நிமிடங்கள் தான் என்றாலும் படத்தில் விறுவிறுப்பு குறைவாக இருப்பதால் நீண்ட நேரம் போகும் ஒரு உணர்வு தவிர்க்க முடியவில்லை. கதையும், கதைக்களமும் சுவாரஸ்யமாக இருப்பினும், திரைக்கதையில் போதிய கவனம் செலுத்தியிருந்தால் டேனி இன்னும் சுறுசுறுப்பாக வந்திருப்பான்.