V4U MEDIA [ Sat, Mar 07, 2020 ]
637 |
2017-ம் ஆண்டு கன்னடத்தில் விக்கி வருண், சம்யுக்த ஹெக்டே நடிப்பில் உருவாகி வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் 'காலேஜ் குமார்'.
காலேஜ் குமார் - நடிகர் பிரபுவின் 225-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
'படி. படி' என்று உயிரையெடுத்த அப்பாவிடம், 'நீ காலேஜூக்கு போய் படித்துப் பார்' என்று மகன் சவால் விட, அந்தச் சவாலை ஏற்று அப்பாவும் காலேஜூக்கு போய் படிக்க.. அவரால் படிக்க முடிந்ததா ? தேர்வு பெற முடிந்ததா ? என்பதுதான் இத்திரைப்படத்தின் கதைக் கரு.
1996-ம் ஆண்டு இயக்குநர் சீமான் இயக்கிய 'பாஞ்சாலங்குறிச்சி' படத்தில்தான் பிரபுவும், மதுபாலாவும் ஜோடியாக நடித்திருந்தனர். அந்தப் படத்திற்குப் பிறகு இப்போதுதான் மீண்டும் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.
பிரபுவின் மகனாக நடித்திருக்கும் ராகுல்விஜய் நல்ல தேர்வு. நாயகி பிரியாவட்லமணி நன்றாக இருக்கிறார். வழக்கமான கமெற்சியால் படத்தில் வரும் கதாநாயகி போல பாட்டுக்கு மட்டும் வந்து செல்கிறார்.
கண்டிப்பான பிரின்ஸிபாலாக நாசர், காமெடியான புரொபஸராக மனோபாலா, கல்லூரி அலுவலக வாட்ச்மேனாக சாம்ஸ் ஆகியோர் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் குரு பிரசாத் ராய் படத்தின் பட்ஜெட்டுக்கு ஏற்ப கலர் புல்லாக காட்டியுள்ளார். குதூப் ஈ கிருபா இசையில் பாடல்கள் & பின்னணி இசை ஓகே ரகம்.
வெறும் படிப்பும், மிகப் பெரிய வேலையும் மட்டுமே ஒருவனையோ முழுமையாக்கிவிடாது. படித்தக் கல்வியினால் அதை வைத்து அவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதில்தான் அவர்கள் கற்றுக் கொண்ட கல்வியின் மதிப்பே இருக்கிறது.
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு திறமை இருக்கிறது. அந்தத் திறமையை வெளிக்கொணரும் வாய்ப்பு அவனுக்குக் கிடைத்தால் அவன் படித்த படிப்பு கொடுக்கும் வாழ்க்கையை விடவும் மேலான வாழ்க்கையை வாழ்வான் என்ற கருத்தை சொல்லியுள்ளார் இயக்குனர்.
Rahul Vijay - Best Actor
1 Votes
Prabhu - Best Actor in a Supporting Role
1 Votes
Nassar - Best Actor in a Supporting Role
1 Votes
Manobala - Best Actor in a Supporting Role
1 Votes
MadhuBala - Best Actress In Supporting Role
1 Votes
Charms - Best Actor in a Supporting Role
1 Votes