V4U MEDIA [ Mon, Feb 24, 2020 ]
600 |
வீட்டை மகனுக்கு எழுதி கொடுத்துவிட்டு வீட்டுக்காவலாளி வேலை பார்க்கிறார் கருப்பசாமி. ஒருநாள், வேலை சென்று திரும்பும்போது, விபத்தில் சிக்கி இடுப்பு எலும்பு உடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். கருப்பசாமியின் தங்கை மகன்கள், அவரை பாசத்தோடு கவனித்துக் கொள்ள, கருப்பசாமியின் மகன் செந்திலோ வேண்டா வெறுப்பாக கருப்பசாமியை பார்க்கிறார்.
படுத்த படுக்கையாக இருக்கும் கருப்பசாமியை, விஷ ஊசி போட்டு தலைக்கூத்தல் என்ற முறையில் கருப்பசாமியை கொலை செய்கிறார் செந்தில். அதன்பின் படம் நெடுக பல அதிர்ச்சித் தரக்கூடிய விசயங்கள் அரங்கேறுகின்றன. இதை 90 நிமிட சினிமாவாக்கி இருக்கிறார் பிரியா கிருஷ்ணசாமி.
நடிகர்கள் ராஜு, சுகுமார் சண்முகம், சு.பா. முத்துக்குமார், ஜெயலட்சுமி, ஸ்டெல்லா கோபி, சமராஜா, பிரேம்நாத், நட்ராஜ், நந்தினி ஆகியோர் தங்களது நடிப்பால் அனைவரையும் கவர்ந்துள்ளனர்.
உலகம் முழுதும் இன்றும் அங்கங்கே இந்தக் கருணைக்கொலைகள் நடைபெற்று வருகின்றன. இது உடனடியாக களையப்பட வேண்டிய அவசர அவசியம் என்பதை கமர்சியல் இல்லாமல் சொல்லியிருக்கிறார் இயக்குனர் பிரியா கிருஷ்ணசாமி.
Karuppasamy - Best Actor in a Supporting Role
1 Votes
Priya Krishnaswamy - Best Debut Director
1 Votes