V4U MEDIA [ Sat, Mar 14, 2020 ]
617 |
ஹீரோ விக்ரம் பிரபு சிறு வயதில் இருந்தே பணத்தை எங்கு கண்டாலும் அதை திருடும் நோயால் பாதிக்கப்பட்டவர். சிறு வயதிலேயே திருடி சீர்திருத்த பள்ளியில் வளர்க்கிறார். ஜெயிலில் இருந்து வெளி வந்ததும் திருந்தாமல் பெரிய அளவில் திருடுகிறார். ஏன் எதற்கு என்று எந்த காரணமும் இல்லாமல் பணத்தை கோடி கோடியாக கொள்ளையடிக்கிறார். டிடெக்டிவ் ஆபிஸரான ஹீரோயின் விக்ரம் பிரபு தான் திருடுகிறார் என கண்டுபிடிக்கிறார். விக்ரம் பிரபு ஏன் கொள்ளையடிக்கிறார் ? பணத்தை பறிகொடுத்த வில்லனிடம் இருந்து தப்பித்தாரா இல்லையா என்பதே மீதிக்கதை.
விக்ரம் பிரபு நன்றாக நடித்துள்ளார். காமெடி, பைட், ரொமான்ஸ் என அனைத்திலும் ஸ்கோர் செய்கிறார். மகிமா நம்பியார் அழகாக இருக்கிறார். தனக்கு கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளார். மகிமா சிகரெட் அடிக்கும் காட்சிகளில் நிறைய செயற்கைத்தனம். அதை தவிர்த்திருக்கலாம். விக்ரம்பிரபுவின் நண்பராக வரும் நண்டு ஜெகன், காவல் அதிகாரியாக வரும் குமரவேல், தேநீர் கடைக்காரராக வரும் யோகிபாபு ஆகியோர் சிரிக்க வைக்கிறார்கள். துப்பறியும் நிறுவனம் நடத்துபவராக வரும் ஜேஎஸ்பி சதீஷ் இயல்பாக நடித்துள்ளார்.