மல்யுத்த வீரர் சாகர் தான்கட் மற்றும் அவருடைய நண்பர்களுக்கும், சுஷில் குமார் மற்றும் அவரது நண்பர்களுக்கும் கடந்த 4ந்தேதி மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது டெல்லியில் உள்ள சத்ராசல் அரங்கிற்கு (New Delhi’s Chhatrasal Stadium) வெளியே மோதல் ஏற்பட்டுள்ளது. எதிரணியை கடுமையாக தாக்கிய சுஷில் குமாரும், அவரது நண்பர்களும் தப்பிவிட்டனர்.
பலத்த காயங்களுடன் கிடந்த சாகர் தன்கட் என்பவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் உயிரிழந்தார். அவர் டெல்லி போலீஸ் தலைமை கான்ஸ்டபிள் ஒருவரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக சாகர் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். முதலில், தனக்கும் இந்த சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறிய சுஷில். சண்டையில் ஈடுபட்டவர்களை தனக்குத் தெரியாது என்றும் கூறினார்.