யோகி பாபு ஹீரோவாக நடிக்கும் படத்தின் ஹாட் அப்டேட், அடேங்கப்பா...அதிர்ச்சியில் முன்னணி ஹீரோக்கள்!!

V4U MEDIA [ Fri, Feb 21, 2020 ]

யோகி பாபு நடிப்பில், விஜய முருகன் இயக்கும் காக்டெய்ல் திரைப்படம் வெளியாகும் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 6ம் தேதி இந்த படம் திரைக்கு வருகிறது. 

யோகி பாபுவை முருகன் வேடத்தில் போஸ்டர் வெளியிட்டு சர்ச்சைக்கு ஆளான காக்டெய்ல் படக்குழு உடனடியாக அடுத்த லுக் போஸ்டரை வெளியிட்டது. விரைவில் டிரைலர், ரிலீஸ் தேதி உள்ளிட்டவற்றை வெளியிடவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

காக்டெய்ல் திரைப்படம் திருமணமான நான்கு நண்பர்களின் கதை. அவர்கள் ஒரு இக்கட்டான சூழ்நிலைக்குள் மாட்ட, அதிலிருந்து எப்படி வெளிவருகிறார்கள் என்பதை காமெடியாக சொல்லவரும் கதை.


காக்டெய்ல் என்பது ஒரு பறவை இனம். ஆஸ்திரேலியாவில் இந்த பறவை அதிகம் காணமுடியும். அந்த பறவையின் உதவியால் யோகி பாபு அந்த பிரச்னையிலிருந்து வெளிவந்து, நண்பர்களுக்கும் உதவுகிறார் என்பதே படத்தின் கதை. 

பிஜி முத்தையா மற்றும் தீபா தயாரிப்பில் உருவாகியுள்ள காக்டெய்ல் படம் ஒருவித எதிர்பார்ப்பை சினிமா ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் காக்டெய்ல் படத்தின் டீஸர் மற்றும் பாடல்களை படக்குழு இன்று வெளியிடுகிறார்கள்.
Latest News