நடிகர் சிபிராஜா இது? வால்டர் ட்ரைலரை பார்த்து வாயடைத்து போன தமிழ் சினிமா ரசிகர்கள்!

V4U MEDIA [ Fri, Feb 21, 2020 ]

நடிகர் சிபிராஜ் காவல் அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடித்து ரிலீஸ் ஆக உள்ள வால்டர் திரைப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது.

நடிகர் சிபிராஜ் முதல் முறையாக ஆக்‌ஷன் போலீஸ் அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் தான் வால்டர். இதற்கு முன் ‘நாய்கள் ஜாக்கிரதை’, ‘சத்யா’ ஆகிய போலீஸ் சார்ந்த திரைப்படங்களில் நடிகர் சிபிராஜ் நடித்திருந்தாலும், தற்போது போலீஸ் அதிகாரி உடுப்பில் மீசையோடு ஒரு ஆக்ரோஷமான காவல் அதிகாரியாக சிபிராஜ் நடித்துள்ள முழு முதல் போலீஸ் திரைப்படமாக இது இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

உண்மை சம்பவங்களை தழுவி எடுக்கும் திரைப்படங்களுக்கு தற்போது பரவலாக மக்களிடம் வரவேற்பு பெற்று வருகின்ற நிலையில் இப்படமும் குழந்தைகள் கடத்தல் சம்மந்தமான உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட திரைப்படமாக உருவாகியுள்ளது.


இப்படத்தில் நடிகர் சிபிராஜுடன் இயக்குனர் சமுத்திரக்கனி, ஒளிப்பதிவாளர் நட்டி மற்றும் நடிகை ஷிரின் கஞ்ச்வாலா ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை அன்பு இயக்கியுள்ளார். 

நடிகர் சத்யராஜ் காவல் அதிகாரியாக நடித்து 1993ல் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் ‘வால்டர் வெற்றிவேல்’. அதே செண்டிமெண்டில் தற்போது அவரின் மகன் சிபிராஜ் திரைப் படத்திற்கும் ‘வால்டர்’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில் நடிகர் சத்யராஜுக்கு ஹிட் அடித்தது போல அவரது மகன் சிபிராஜுக்கும் வால்டர் திரைப்படம் ஒரு வெற்றிப்படமாக அமையுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது. வால்டர் திரைப்படம் மார்ச் 6 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளனர். இந்நிலையில் நேற்று வால்டர் படத்தின் ட்ரைலரை படக்குழு நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து வெளியிட்டனர்.
Latest News