தல அஜித்தின் வலிமை படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சுவிட்சர்லாந்தில்?

V4U MEDIA [ Mon, Jan 27, 2020 ]

31

'நேர்கொண்ட பார்வை' படத்துக்குப் பிறகு தல அஜித் நடிக்கவுள்ள படத்தின் முதற்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கவுள்ள இந்தப் படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவி அவர்களின் கணவர் போனி கபூர் தயாரிக்கவுள்ளார். இதில் தல அஜித்துடன் யாரெல்லாம் நடிக்கவுள்ளார்கள் என்ற தேர்வு முடிவடைந்துவிட்டாலும், படக்குழு இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. 

இப்படத்தை இந்தியா மற்றும் வெளிநாடுகளில் காட்சிகளைப் படமாக்கவுள்ளனர். இதில் வெளிநாடுகளில் படமாக்கப்படவுள்ள சண்டைக்காட்சிகளை ஹாலிவுட் சண்டைக் கலைஞர்களைக் கொண்டு வடிவமைக்கவும் படக்குழு திட்டமிட்டுள்ளது. 


"வலிமை’ படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 13-ம் தேதி அன்று தொடங்கியது இப்போது இப்படத்தின் முதற் கட்ட அட்டவணை முடிந்துள்ளது. முதல் கட்ட படப்பிடிப்பில் ஆக்க்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டது. அடுத்தாண்டு தீபாவளிக்கு இப்படம் வெளியாகும் என்றும் அஜித் இதில் காவல்துறை அதிகாரியாக நடிக்கவுள்ளார்" என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் ’வலிமை’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு வட இந்தியாவில் நடைபெற இருப்பதாகவும் இதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் வரும் ஏப்ரல் மாதம் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படத்தில் மோட்டார் ரேஸ் மற்றும் கார் ரேஸ் ஆகிய இரண்டு விறுவிறுப்பான ரேஸ் காட்சிகள் இருப்பதால் அந்த காட்சிகளை சுவிட்சர்லாந்தில் படமாக்க படக்குழு முடிவு செய்துள்ளது.




Latest News