டிக் டாக் புகழ் இலக்கியா நடிக்கும் படம் 'நீ சுடத்தான் வந்தியா'?

V4U MEDIA [ Sat, Feb 20, 2021 ]

139
டிக் டாக் புகழ் இலக்கியா நடிக்கும் படம் ' நீ சுடத்தான் வந்தியா'

டிக் டாக் உலகத்தில் தனது அதிரடியான கவர்ச்சி வீடியோக்கள் மூலம் புகழ்பெற்றவர் இலக்கியா. அவர் திரையுலகில் அறிமுகமாகும் படம்தான் 'நீ சுடத்தான் வந்தியா?'காடும்  காடு சார்ந்த இடங்களிலும் நடக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் கதை இது.

இப்படத்தை ஆல்பைன் மீடியா நிறுவனம் தயாரிக்கிறது.  எடிட்டிங்கும் செய்து இயக்குபவர் க.துரைராஜ்.இவர் இயக்குநர் பிரவீன் காந்தியிடம்  சினிமா கற்றவர்.அருண்குமார் நாயகனாக நடிக்கிறார். இலக்கியா நாயகி. மேலும் விஜய் டிவி புகழ் தங்கதுரை, நெல்லை சிவா, கொட்டாச்சி போன்றோரும் நடிக்கிறார்கள். படத்திற்கு செல்வா ஒளிப்பதிவுசெய்கிறார். துரைராஜன் இசையமைக்கிறார்.படத்தில் ஐந்து பாடல்கள் ,இரண்டு சண்டைக் காட்சிகள் உள்ளன.