செம்மையா நடிச்சிருக்க !! பிரபல நடிகரை அழைத்து பாராட்டிய தளபதி விஜய் !

V4U MEDIA [ Mon, Jan 11, 2021 ]

90

இயக்குநர்கள் சுதா கொங்குரா, விக்னேஷ் சிவன், கௌதம் மேனன் மற்றும் வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ள “பாவகதைகள்” ஆந்தாலஜி திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் கடந்த மாதம் வெளியானது.

இயக்குநர்கள் சுதா கொங்குரா, விக்னேஷ் சிவன், கௌதம் மேனன் மற்றும் வெற்றிமாறன் இணைந்து இப்படத்தினை இயக்கியுள்ளனர்.

“பாவக்கதைகள்” காதல், அந்தஸ்து, கௌரவம் ஆகியவை நம் உறவுகளில் ஏற்படுத்தும் மாற்றங்களை கூறும் நான்கு அழகான கதைகளை ஆந்தாலஜி வகையில் சொல்லும்படி உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தினை ரோனி ஸ்க்ரூவாலா வின் RSVP Movies நிறுவனம் மற்றும் ஆஷி துவா சாராவின் Flying Unicorn Entertainment நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளார்கள். நெட்ஃப்ளிஸ் Netflix நிறுவனம் தங்களது தளத்தில் 190 நாடுகளில் ப்ரத்யேகமாக இப்படத்தினை வெளியிடுகிறது.

தமிழின் புகழ்மிகு பெரு நட்சத்திரங்களான அஞ்சலி, பவானி ஶ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன், ஹரி, காளிதாஸ் ஜெயராம், சாந்தனு, கல்கி கொச்சிலின், பதம் குமார், பிரகாஷ் ராஜ், சாய் பல்லவி, மற்றும் சிம்ரனுடன் மேலும் பல முக்கிய நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.


இதில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான "தங்கம்" திரைப்படத்தில் காளிதாஸ் ஜெயராம் மூன்றாம் பாலினத்தவராக நடித்திருந்தார்.

இந்த கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் அவர் தயங்கினாராம். ஆனால் அதன் பின்னர் நடிக்க ஒத்துக்கொண்ட அவர் இந்த கதாபாத்திரத்தை மக்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டால் சினிமாவை விட்டே விலகலாம் என முடிவு செய்திருந்ததாக தெரிவித்துள்ளார். ஆனால் எதிர்பார்த்ததை விட ரசிகர்கள் மத்தியில் மிக அதிகமாகவே அந்த கதாபாத்திரத்தை வரவேற்பு கிடைத்தது.


மேலும் , சமீபத்தில் நடிகர் காளிதாஸ் ஜெயராம் தங்கம் படத்தில் தான் நடித்த கதாபாத்திரத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டால் சினிமாவை விட்டே விலகலாம் என இருந்ததாக கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது மாஸ்டர் வெளியீட்டுக்காக காத்திருக்கின்ற தளபதி விஜய்,
நடிகர் காளிதாஸ் ஜெயராமை நேரில் அழைத்து தங்கம் படத்தில் அவர் நடித்த நடிப்பைப் பாராட்டியுள்ளார்.

இன்று காளிதாஸ் நடிகர் விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே சாந்தனு நடிப்பை தளபதி விஜய் பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Cinema

Latest News