சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படத்தின் மாஸ் அப்டேட், ஆச்சரியத்தில் ரசிகர்கள்!!

V4U MEDIA [ Fri, Feb 14, 2020 ]

சிவகார்திகேயன் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் "டாக்டர்" என்ற புது படத்தில் நடிக்கிறார். நெல்சன் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த "கோலமாவு கோகிலா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் என்பது நம் அனைவரும் அறிந்ததே. அடுத்ததாக தற்போது சிவகார்த்திகேயனை வைத்து "டாக்டர்" என்ற படத்தை இயக்கி வருகிறார். KJR ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் தான் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது.

இந்நிலையில் சற்றுமுன் இப்படத்தின் கலை இயக்குனர் கிரண் தனது ட்விட்டர் பக்கத்தில் டாக்டர் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது என்று கூறி படத்தின் இயக்குனர் நெல்சனுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.


Latest News