அயலான் படத்தில் சிவகார்த்திகேயன் இத்தனை கெட்டப்பில் நடிக்கிறாரா? ரசிகர்களுக்கு ஹாட் அப்டேட் உள்ளே!

V4U MEDIA [ Thu, Feb 13, 2020 ]

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் வெளியான ஹீரோ படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் ‘அயலான்’. பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பை இயக்குநர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் சமீபத்தில் வெளியிட்டார். அயலான் திரைப்படத்தை ‘இன்று நேற்று நாளை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ரவிகுமார் இயக்கவுள்ளார்.

ஏற்கனவே படத்திற்கு ‘அயலான்’ என்று பெயரிடப்பட்டுள்ளதால், ஏலியன்கள் குறித்த கதையாக இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார்.


இந்நிலையில் சற்றுமுன் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது வருகிற 17ம் தேதி சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் தினத்தை முன்னியிட்டு அயலான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதை அறிந்த எஸ்கே ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் இந்த படத்தில் முதல் முறையாக சிவகார்த்திகேயன் மூன்று வேடங்களில் நடிக்கிறார் என்ற தகவல் கசிந்துள்ளது. சிவகார்த்திகேயன் இதுவரை இரண்டு வேடத்தில் கூட எந்த ஒரு படத்திலும் நடித்ததில்லை என்ற நிலையில் முதல் முறையாக மூன்று வேடத்தில் நடிக்க இருப்பதாக வெளிவந்த செய்தி அவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




Latest News