இணையத்தை கலக்கும் சசிகுமார் நிக்கி கல்ரானி நடித்துள்ள ராஜவம்சம் படத்தின் பாடல்!!

V4U MEDIA [ Thu, Feb 20, 2020 ]

சசிகுமார் நடிப்பில் அறிமுக இயக்குநர் கதிர்வேலு இயக்கியுள்ள திரைப்படம் ராஜவம்சம். இப்படத்திற்கு தமிழ் சினிமாவில் நல்ல எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இயக்குநர் சுந்தர்.சியின் உதவியாளரான கதிர்வேலு இயக்கும் ராஜவம்சம் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். மேலும் விஜயகுமார், சிங்கம்புலி, தம்பி ராமையா, மனோபாலா, ராஜ்கபூர், ரேகா என பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கூட்டு குடும்பத்தின் சந்தோஷத்தையும், உறவுகளின் முக்கியத்துவத்தையும் சொல்லும் விதமாக இப்படம் உருவாகியுள்ளது. 

தற்போது ராஜவம்சம் படத்திலிருந்து "மானே உன்ன" சிங்கள் டிராக் பாடலை இன்ற மாலை 4 மணிக்கு டி. இம்மான் மற்றும் ஜி.வி பிரகாஷ் வெளியிட்டுள்ளனர். இப்படத்தை செந்தூர் பிலிம்ஸ் தயாரித்துள்ளார்.
Latest News