மாதவன் உதவியோடு வெளியான யோகி பாபுவின் பன்னிக்குட்டி!!

V4U MEDIA [ Mon, Jan 27, 2020 ]

27

மெகா பட்ஜெட் படங்கள் முதல், மினி பட்ஜெட் படங்கள் வரை கதைக்கு முக்கியத்துவம் தரும் படங்களை தயாரித்து வருகிறது லைகா நிறுவனம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த, 2 . ௦ படத்தை தொடர்ந்து, தற்போது கமல் டித்து வரும் இந்தியன் படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது, இந்த படத்தை தொடர்ந்து யோகிபாபு கதையின் நாயகனாக நடிக்க இருக்கும் ''பன்னிக்குட்டி'' என்கிற படத்தை தயாரிக்க உள்ளது. இந்த படத்தினை அனுசரண் முருகையா இயக்குகிறார். கருணாகரன், யோகிபாபு, சிங்கம் புலி, திண்டுக்கல் லியோனி, T.P கஜேந்திரன், லக்ஷ்மி ப்ரியா, ராமர் , 'பழைய ஜோக்' தங்கதுரை உள்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் கிருஷ்ணகுமார் இசையமைக்கவுள்ளார். இவர் ஏற்கனவே ஆண்டவன் கட்டளை, 49-0, கிருமி ஆகிய படங்களுக்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியானது, படம் முழுவதும் நகைச்சுவையாக பன்னிகுட்டியை சுற்றி வருகிறது. இந்த படத்தின் கதை முழுக்க முழுக்க பன்னிகுட்டியுடன் யோகி பாபு அடிக்கும் லூட்டியை, மையப்படுத்தி காமெடியாக எடுத்துள்ளனர். இப்படத்தின் ட்ரைலருக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.


Latest News