நிவேதா பெத்துராஜ் பெயரை கையில் பச்சை குத்தி கொண்ட ரசிகர் !

V4U MEDIA [ Mon, Nov 30, 2020 ]

147

பொதுவாகவே சினிமாவை பொறுத்தவரை நடிகர் நடிகைகளுக்கு வெறித்தனமான ரசிகர்கள் இருப்பார்கள் என்பது நாம் அனைவரும் தெரிந்ததே. அதும் குறிப்பாக தமிழ் சினிமாவில், சில வருடங்களுக்கு முன் குஷ்புவுக்கு கோவில் கட்டியது தமிழகத்தில் தான்.


இந்த நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகை "நிவேதா பெத்துராஜ்"க்கு பிரபு என்ற வெறித்தனமான ரசிகர் ஒருவர் அவருடைய பெயரை கையில் பச்சை குத்தி கொண்டுள்ளார்.

அதுமட்டுமின்றி அவர் தற்போது எங்கு படப்பிடிப்பில் இருக்கிறார் என்பதை கண்டுபிடித்து அவரை நேரில் சந்தித்து அவரது பெயரை பச்சை குத்தி அதை அவரிடமே காண்பித்துள்ளார். தனது பெயரை பச்சை குத்திய ரசிகரை பார்த்து ஆச்சரியம் அடைந்த நிவேதா பெத்துராஜ் அவருக்கு பாராட்டு தெரிவித்து அவருடன் இணைந்து புகைப்படம் ஒன்றை எடுத்து கொண்டார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் மிக வைரலாகி வருகிறது. நடிகை நிவேதா பெத்துராஜ் இன்று (நவம்பர் 30) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.Tags : Cinema

Latest News