ஜிவி பிரகாஷ் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் இயக்குனர் மிஷ்கின்!

V4U MEDIA [ Sat, Sep 19, 2020 ]

126

தமிழ் சினிமவில் ஒரே நேரத்தில் நடிகராகவும், இசையமைப்பாளராகவும் பிஸியாக வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார். 2006ம் ஆண்டு 'வெயில்' என்ற படத்தின் மூலம் ஜி.வி.பிரகாஷ் குமார் இசைப் பயணம் ஆரம்பமானது. ஜி.வசந்த பாலன் இயக்கியிருந்த அந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டானது.

Image

அதனை தொடர்ந்து அஜித்தின் 'கிரீடம்', தனுஷின் 'பொல்லாதவன்', சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 'குசேலன்', தளபதி விஜய் யின் 'தலைவா' , கார்த்தியின் 'ஆயிரத்தில் ஒருவன்', விக்ரமின் 'தெய்வத் திருமகள்' என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து விட்டார் ஜி.வி.பிரகாஷ் குமார்.ஜி.வி.பிரகாஷ் குமார், 2015ம் ஆண்டு 'டார்லிங்' என்ற படத்தில் கதையின் நாயகனாக அவதாரம் எடுத்தார். அதுக்கு கிடைத்த வரவேற்பால், அடுத்து 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' என்ற படத்தில் நடித்தார்.இப்போது இசையமைப்பாளராகவும், நடிகராகவும் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு பல படங்கள் வரிசையில் உள்ளது. இதில் 'பேச்சலர்' எனும் படத்தை சதீஷ் செல்வக்குமார் இயக்க, ஹீரோயினாக திவ்யபாரதி நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு ஜெட் ஸ்பீடில் நடந்து வருகிறது.

இந்நிலையில், இந்த படத்தில் பிரபல இயக்குநர் மிஷ்கின் கெஸ்ட் ரோலில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Tags : Cinema

Latest News