தளபதி விஜய் ரசிகர்களுக்கான ஆன்லைன் கேம் ஷோ ! பரிசுகள் என்ன தெரியுமா ?

V4U MEDIA [ Wed, Sep 16, 2020 ]

44

தளபதி விஜய்க்கு உள்ள ரசிகர்கள் பட்டாளம் நாம் அறிந்த ஒன்றுதான்.

தற்போது அவர்களை மகிழ்விக்க தயாரிப்பாளர் தனஞ்செயன் அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மாஸ்டர் படத்தின் ரிலீஸ் உரிமையை வைத்திருக்கும் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் புதிய கேம் ஷோ ஒன்றை அறிவித்திருக்கிறது. அந்த நிகழ்ச்சி மூலமாக அவர்கள் World’s Biggest fan of Thalapathy என ஒருவருக்கு பட்டம் அளிக்க உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு பரிசுகளும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. World’s Biggest fan of Thalapathy டைட்டில் வெல்பவருக்கு ஒரு பஜாஜ் பல்சர் 150 பைக் பரிசாக வழங்கப்பட உள்ளது. அது மட்டுமின்றி வாரா வாரம் நடக்கும் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு மாஸ்டர் முதல் நாள் படம் பார்ப்பதற்காக 5 டிக்கெட்டுகளும் வழங்கப்பட இருக்கிறது.

இந்த நிகழ்ச்சி பற்றிய அறிமுக வீடியோ சினிமா சென்ட்ரல் & வலைப்பேச்சு யூடியூபில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது .

Latest News