வைரலாகும் தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி யின் "மாஸ்டர்" புதிய போஸ்டர் !!

V4U MEDIA [ Mon, Jan 11, 2021 ]

117

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். இப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி வில்லனாகவும், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஆண்ட்ரியா, கௌரி கிஷன் என பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார். சேவியர் பிரிட்டோ மற்றும் லலித் குமார் இணைந்து பெரும் பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளனர். கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்கு வந்த பிறகு இப்படத்தின் ரிலீஸ் திரையரங்கில் மிக பிரமாண்டமான முறையில் இருக்கும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். கண்டிப்பாக பொங்கல் வெளியாகும் என சினிமா வட்டாரத்தில் தெரிவித்துள்ளனர். படத்தை எதிர்பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருகின்றனர்.

 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13 உலகம் முழுவதும் 5 மொழிகளில் வெளியிடப்படும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Image

தினமும் மாலை மாஸ்டர் படக்குழுவினர் ப்ரோமோ ஒன்றை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று வெளியான போஸ்டர் மிகவும் வைரலாகி வருகிறது.

தளபதி விஜய் சட்டையின்றி வெறும் உடம்புடன் நின்று, விஜய் சேதுபதியை அடிப்பது போன்று காட்சி இடம்பெற்றுள்ளது.

ஆக்சன் காட்சிக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளதால் மாஸ்டர் படம் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Latest News