முதலமைச்சராக களமிறங்கிய மம்மூட்டி, இணையத்தை கலக்கும் வீடியோ.., அதிர்ச்சியில் திரையுலகம்!!

V4U MEDIA [ Fri, Feb 21, 2020 ]

பிரபல மலையாள நடிகர் மம்முட்டி தமிழில் அழகன், தளபதி, மறுமலர்ச்சி, ஆனந்தம் மற்றும் சமீபத்தில் திரைக்கு வந்து வரவேற்பை பெற்ற பேரன்பு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் வெளியான யாத்ரா படத்தில் முன்னாள் ஆந்திர முதல்-மந்திரி ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி வேடத்தில் நடித்தார். இதன் மூலம் ஆந்திர ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார்.

இதுவரை 400-க்கும் மேற்பட்ட படங்களில் மம்முட்டி நடித்து இருக்கிறார். கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் வாழ்க்கையை ஒன் என்ற பெயரில் மலையாளத்தில் திரைப்படமாக எடுக்கின்றனர்.

இந்த படத்திலும் பினராயி விஜயன் வேடத்தில் மம்முட்டி நடிக்கிறார். சந்தோஷ் விஸ்வநாத் இயக்குகிறார்.

இதில் ஸ்ரீனிவாசன், ஜோஜூ ஜார்ஜ், உன்னி கிருஷ்ணன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். இந்த படம் ரூ.50 கோடி பட்ஜெட்டில் தயாராவதாக கூறப்படுகிறது.

படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், "ஒன்" திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. சந்தோஷ் விஸ்வநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு, கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். 

ஏற்கனவே டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு படத்திலும் மம்முட்டி நடித்து இருந்தார். இந்த படத்தில் அவருக்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.


Latest News