லாஸ்லியா, ஆரி நடிக்கும் படத்தின் ஆச்சரியமான அப்டேட்! லாஸ்லியா ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தான்.

V4U MEDIA [ Thu, Feb 13, 2020 ]

36

ஒப்பந்தமான முதல் படத்தின் படப்பிடிப்பு தொடங்காத நிலையில் இரண்டாவது படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் லாஸ்லியா.


பிக் பாஸ், தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சி. உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி மூலம் பல சாமானியர்களின் வாழ்க்கை வெள்ளித்திரையில் ஜொலிக்கின்றது. சிக்கலில் சிக்கி தவிக்கும் இலங்கை தமிழர் தர்ஷன் கதை ஒருபுறம் இருந்தாலும், இலங்கை தமிழச்சி லாஸ்லியாவிற்கு தற்போது பட வாய்ப்புகள் வர தொடங்கியுள்ளது. 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் நடிப்பில் வெளிவர இருக்கும் ஃப்ரெண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார் லாஸ்லியா. இன்னும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் தொடங்காத நிலையில் லாஸ்லியாவிற்கு அடித்துள்ளது ஒரு ஜாக்பாட். மாலைப்பொழுதின் மயக்கத்திலே, நெடுஞ்சாலை, நாகேஷ் திரையரங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகர் ஆரி நடிக்கும் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் லாஸ்லியா. 

இந்த படத்தில் சிருஷ்டி டாங்கேவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார், மேலும் இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. விரைவில் இந்த படங்களின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. சென்னை, பாண்டிச்சேரி மற்றும் மலேசியா போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் இன்னொரு கதாநாயகியாக பிக்பாஸ் அபிராமி நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மூன்று பிரபலமான நடிகைகள் ஒரே படத்தில் இறங்கியுள்ளதால் நிச்சயம் இப்படம் வேறுமாதிரி ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Latest News