வில்லனாக தெரிந்தவர் இப்போது ஹீரோ ஆகிட்டாரே ! யாரை சொல்கிறார் கமல் ?

V4U MEDIA [ Sat, Oct 17, 2020 ]

40

பிக் பாஸ் சீசன் 4 தமிழில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் கடந்த 1 வாரமாக ஒளிபரப்பாகி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்க புதிய டாஸ்க் கொடுத்து போட்டியாளர்களுக்குள் போட்டியை வரவைத்துள்ளார் பிக்பாஸ். அத்துடன் நாமினேஷன் ஆரம்பமாகியுள்ளதால் இனி ஒவ்வொருவராக வெளியேற்றப்படுவார்கள்.

வார இறுதியில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை வரும் கமல் அவர்கள் நிகழ்ச்சி ரசிகர்கள் அனைவராலும் பார்க்கப்படும். கடந்த வார இறுதியில் நடைபெற்ற இரண்டு நிகழ்ச்சிகளும் வேற லெவலில் இருக்கும் என ஆவலோடு காத்திருந்த ரசிகர்கள் சற்று ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில் தற்ப்போது இன்று வெளியாகியுள்ள முதல் ப்ரோமோ வீடியோவில் பிக்பாஸ் வீட்டில் கமல் அவர்கள் மாஸ்க்கை கழட்டி விட்டு, உள்ளேயும் முகமூடிகள் அவிழ ஆரம்பித்துவிட்டது. பார்க்க வில்லனின் அடியாள் போன்ற தோற்றம் இருந்தாலும் உண்மை முகத்தை பார்த்ததும் நல்லவர் போல தெரிகிறது. ஹீரோவாகவே ஆகிடுவார் போல ! அப்போ நாம நல்லவங்கன்னு நெஞ்சிட்டு இருந்தவங்களாம் ? என கூறி இன்றைய நிகழ்ச்சியின் எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளார் உலக நாயகன் கமல். இனிமேல் நிகழ்ச்சி கலகலப்பா போகும் என எதிர்பார்க்கலாம். இனி சூடு பிடிக்கும் என நம்பலாம்.

Tags : Cinema

Latest News