இந்தியன் 2 படிப்பிடிப்பில் மரணமடைந்த ஊழியர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கிய லைக்கா!! முழு விவரம் உள்ளே.

V4U MEDIA [ Fri, Feb 21, 2020 ]

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி நசரத்பேட்டையில் உள்ள இ.வி.பி. பொழுதுபோக்கு பூங்காவில் நடந்து வருகிறது. அங்கு விசேஷ அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்துகின்றனர்.நேற்று மாலை நடந்த படப்பிடிப்பில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் மற்றும் துணை நடிகர்-நடிகைகள் பங்கேற்ற காட்சியை படமாக்கி கொண்டிருந்தனர்.

மிக உயரமான ராட்சத கிரேனில் மின்விளக்குகளை பொருத்தி இந்த காட்சி படம்பிடிக்கப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக கிரேன் சரிந்து விழுந்தது. இதில் கீழே நின்றுகொண்டிருந்த உதவி இயக்குனர் கிருஷ்ணா, மற்றும் படப்பிடிப்பு ஊழியர்கள் மது(வயது 29), சந்திரன்(60) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 


மேலும் ஒரு பெண் உள்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர்.உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. படப்பிடிப்பு குழுவினர் காயம் அடைந்தவர்களை மீட்டு தண்டலம் தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் தனியார் மருத்துவமனை சென்ற கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் சங்கர் ஆகியோர் சிகிச்சை பெற்று வருபவர்களை சென்று நலம் விசாரித்தனர். இந்த விபத்தில் இயக்குனர் சங்கரின் பெர்சனல் அசிஸ்டன்ட் மது ( 29) மற்றும் ஷங்கரின் உதவி இயக்குனர் கிருஷ்ணா (34 ) என்பவரும் உயிரிழந்தனர்.

இந்த சோகமான சம்பவத்திற்கு திரைத்துறையில் உள்ள பல்வேறு பிரபலங்கள் இறந்தவர்களின் கும்பத்திற்கு வருத்தம் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டு வந்தனர். மேலும் சிலர் மருத்துவமனைக்கு சென்று அங்கிருந்த குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் கூறினர்.

இதையடுத்து நடிகர் கமல்ஹாசன் இந்த சம்பத்தில் உயிரிழந்த மற்றும் படுகாயமடைந்த குடும்பங்களுக்கு மொத்தம் 1 கோடி நிதி உதவி வழங்கினார். இந்நிலையில் தயாரிப்பு நிறுவனமான லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் மொத்தம் 2 கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளனர். இதில் இறந்த மூன்று பேருக்கு தலா 50 லட்சம் ருபாயும் மீதமுள்ள 50 லட்சம் ரூபாய் ஃபெப்சி யூனியனுக்கு வழங்கப்பட்டு அந்த தொகை காயமடைந்தவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்படும் என கூறியுள்ளனர்.


Latest News