சித்தார்த் நடித்துள்ள படத்திற்கு பாடகராக களமிறங்கிய இயக்குனர் கெளதம் மேனன்!!

V4U MEDIA [ Wed, Jan 29, 2020 ]

நடிகர் சித்தார்த் நடிப்பில் இயக்குநர் கார்த்திக் G கிரிஷ் இயக்கும் “டக்கர்” அப்பா மகன் என இரண்டு ரோல்களில் கலக்கலாக நடித்திருக்கிறார் யோகிபாபு. அவரது கேரக்டர் எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தும் அதே நேரம், வயிறு குலுங்க வைக்கும் காமெடி கலாட்டாவாகவும் இருக்கும். திரையில் அப்பா மகன் என இரு தோற்றங்களில் அவர் வரும்போது அரங்கம் அதிரும் என்கிறார் இயக்குநர்.

சித்தார்த் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் திவ்யான்ஷா கௌஷிக் நாயகியாக நடிக்கிறார். இரண்டு வேறு வேறு, கோபம் கொப்பளிக்கும் மனநிலை கொண்ட இருவரும் சந்திக்கும் போது, அவர்களது அளவுக்கு அதிகமான ஈகோ மனநிலையால் அவர்கள் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளை சுவாரஸ்யமாக சொல்லும் கதைதான் “டக்கர்”.

ஃபேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் மற்றும் ஜெயராம் இத்திரைப்படத்தை தயாரிக்கிறார்கள். சித்தார்த், திவ்யான்ஷா கௌஷிக், அபிமன்யு சிங், யோகிபாபு, முனீஷ்காந்த், RJ விக்னேஷ் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு செய்ய, நிவாஸ் K பிரசன்னா இசையமைக்கிறார். கௌதம் G A படத்தொகுப்பு செய்கிறார்.


இந்த நிலையில் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் எனப் பல அவதாரங்களில் கோலிவுட் திரையுலகில் கோலோச்சி வரும் கவுதம் மேனன் அடுத்ததாக பாடகர் அவதாரத்தையும் எடுத்துள்ளார். விரைவில் வெளியாக இருக்கும் ’டக்கர்’ என்ற திரைப்படத்திற்காக கவுத மேனன் ஒரு பாடலை பாடியுள்ளார். இந்த பாடலை பிரபல பாடகர் சித் ஸ்ரீராமும் இணைந்து பாடியுள்ளார் அவர் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடல் இன்னும் ஒரு சில நாட்களில் வெளிவரவுள்ளது.Latest News