தளபதி 64 படத்தின் சேட்டிலைட் உரிமையை வாங்கிய பிரபல தொலைக்காட்சி சேனல் !

V4U MEDIA [ Sat, Nov 30, 2019 ]

பிகில் படத்தை அடுத்து தளபதி விஜய் தனது 64 ஆவது படத்தை இப்போது மாநகரம், கைதி படங்களின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்கிறார், மாளவிகா மோஹனன் ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படத்துக்கு தற்காலிகமாக தளபதி விஜய் 64 என பெயர் வைத்து அழைக்கப்பட்டு வருகிறது. இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் நடந்து வருகிறது.

இந்நிலையில், தளபதி விஜய் நடிக்கும் இப்படத்தின் சேட்டிலைட் உரிமையைக் கைப்பற்ற பிரபல தனியார் சேனல்கள் போட்டி போட்டுக் கொண்டிருந்த நிலையில், இப்படத்துக்கான ஒளிபரப்பு உரிமையை சன் டிவி பெற்றுள்ளது.
 
இந்த அறிவிப்பை சன் டிவி நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

Latest News