மீண்டும் காதலில் களமிறங்கும் பாரதிராஜா அவர்கள்!!

V4U MEDIA [ Thu, Feb 13, 2020 ]

ஐரோப்பியாவில் வாழும் இலங்கை தமிழர்களை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் வெளியீடு தள்ளிக்கொண்டே போனதால் படத்தின் தலைப்பை மீண்டும் ஒரு மரியாதை என பாரதிராஜா மாற்றினார். இப்படம் வரும் 21 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. காதலும், காதலில் ஏற்படும் பிரச்னைகளுமே படத்தின் கருவாக உள்ளது. படத்தின் ட்ரெய்லரின் இறுதியில் பாரதிராஜா. Life is பெஔதிபுல் Journey என கர்ஜிக்கிறார். அதேபோல் ஓம் என்ற கதாபாத்திரத்தில் திரையில் தோன்றும் பாரதிராஜாவின் நடிப்பு, பேசும்படியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குநர் இமயம் பாரதிராஜா, கடந்த சில வருடங்களுக்கு முன் ஆரம்பித்த படம், ஓம், இப்படத்தை அவரிடம் உதவி இயக்குநராக இருந்த நிர்மல்குமார் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அவருக்கு சலீம் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததால் இதிலிருந்து விலகினார். எனவே இப்படத்தை பாரதிராஜாவே மனோஜ் கிரியேஷன்ஸ் மூலம் இயக்கி தயாரிக்கிறார். இதில் நடிகை மோனிகா, நடிகர் ஜோ மல்லூரி, நடிகை ராசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாலை சகாதேவன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு ரகுநந்தன் இசையமைத்துள்ளார்.

Latest News