வைரலாகும் இயக்குனர் ரஞ்சித்தின் சார்பட்டா இரண்டாம் லுக்

V4U MEDIA [ Fri, Jan 15, 2021 ]

117

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி மற்றும் காலா, அட்டகத்தி தினேஷ் நடித்த அட்டகத்தி, கார்த்தி நடித்த மெட்ராஸ் என சில திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் பா ரஞ்சித், தற்போது ஆர்யா நடித்து வரும் பெயரிடப்படாத திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

இயக்குனராக மட்டுமின்றி தனது நீலம் புரடொக்சன்ஸ் நிறுவனத்தின் மூலம் சில தரமான திரைப்படங்களை தயாரித்து வருகிறார். இதுவரை பரியேறும் பெருமாள் மற்றும் இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு என இரண்டு படங்களை தயாரித்துள்ளார். தற்போது கலையரசன் நடிக்கும் 'குதிரைவால்' திரைப்படத்தை தயாரித்து வருகிறார்.

Image

பா.ரஞ்சித் இயங்கிவரும் படத்திற்காக நடிகர் ஆர்யா மிக கடுமையாக உடற்பயிற்சி செய்யும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன.

1970களில் வடசென்னையில் நடப்பது போல இந்தப் படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்காக சென்னை ஈ.வி.பி. ஸ்டூடியோசில் மிகப்பெரிய அரங்கம் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு முடிந்துள்ளது.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜி.முரளியின் ஒளிப்பதிவில், செல்வாவின் எடிட்டிங்கில் உருவாக இருக்கும் இந்தப் படத்தில் ஆர்யாவுடன் இணைந்து கலையரசன் நடிக்கிறார்.

சமீபத்தில் "சார்பட்டா" ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றை வெளியிட்டனர் படக்குழுவினர். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது போஸ்டர்.

இந்த நிலையில் இன்று (ஜனவரி 15) சர்ப்பட்டா படத்தின் இரண்டாம் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டனர். இப்புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் மிக வைரலாகி வருகிறது.

Tags : Cinema

Latest News