2 கோடி ரூபாயில் பிரம்மாண்டமாக சண்டை காட்சியை உருவாக்கிய சுந்தர் சி !

V4U MEDIA [ Sat, Nov 21, 2020 ]

132

இயக்குனர் சுந்தர் சி வரிசையாக படங்களை இயக்கி வருகிறார். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் இவருக்கென்றே தனி இடம் உண்டு.

கொரோனா லாக்டவுனுக்கு முன்பாக அவர் நடிகர் விஷாலை வைத்து இயக்கிய படம் ஆக்‌ஷன். அதனை தொடர்ந்து, அரண்மனை 3 படத்தை இயக்கி வந்தார். கொரோனா ஊரடங்கு உத்தரவினால் தற்காலிகமாக ஷூட்டிங் நிறுத்தி வைத்திருந்தார்.

கொரோனா ஊரடங்கு தளர்வு ஏற்பட்டுள்ள நிலையில் மீண்டும் படபிடிப்பினை தொடங்கியுள்ளார் சுந்தர் சி. இந்த படத்தில் நடிகர் ஆர்யாவை முதன் முதலாக பேயாக நடிக்க வைத்துள்ளாராம் சுந்தர் சி. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்த படத்தை மிக பிரம்மாண்டமாக உருவாக்கி வருகிறாராம் சுந்தர் சி.

படத்தின் இறுதி காட்சிகாக மட்டுமே 2 கோடி ரூபாய் மதிப்பில் செட் அமைத்து அதில் சில சண்டை காட்சிகளை பீட்டர் ஹெயின் துணையுடன் ஒரு வாரம் படம்பிடிக்க உள்ளாராம். ஆர்யாவிற்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார்.

Tags : Cinema

Latest News