இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் ஆண்ட்ரியா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் படத்தின் இயக்குனர் யார் தெரியுமா??

V4U MEDIA [ Wed, Mar 25, 2020 ]

'அசுரன்' படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது சூரி படத்தின் பணிகளையும், சூர்யா நடிக்கவுள்ள படத்தின் பணிகளையும் கவனித்து வருகிறார். இதற்கிடையே புதுமுக இயக்குநர் ஆனந்த் இயக்கவுள்ள புதிய படத்தைத் தயாரிக்கவுள்ளார். இதில் ஆண்ட்ரியா பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.


ஏப்ரலில் படப்பிடிப்புக்குச் செல்ல படக்குழு ஆயத்தமானது. தற்போது கரோனா அச்சத்தால் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் ‘ஹவுஸ் ஓனர்’ படத்தில் நடித்த விஜி சந்திரசேகர் மகள் லவ்லின் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
Latest News