V4U MEDIA [ Tue, Dec 01, 2020 ]
295 |
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கில் மட்டுமல்ல, பிட்னஸிலும் அதிக கவனம் செலுத்தக் கூடியவர். இவரும், இவரது மனைவியும், நடிகையுமான அனுஷ்கா ஷர்மாவும் யோகா மற்றும் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவது வழக்கம் .
இந்த நிலையில், கர்ப்பிணியாக இருக்கும் அனுஷ்கா ஷர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தலைகீழாக நின்று யோகாப் பயிற்சி செய்ய, கணவன் விராட் கோலி அவருக்கு உதவும் வண்ணம் அவரின் காலை பிடிப்பது போன்ற ஒரு புகைப்படத்துடன் கூடிய பதிவை போட்டுள்ளார்.
அதில், “வாழ்க்கையில் யோகாவிற்கு முக்கியப் பங்கு உண்டு. கர்ப்பம் தரிப்பதற்கு முன்பாக செய்து வந்த சில ஆசனங்களை தவிர்த்து விட்டு, சில ஆசனங்களை செய்து வருகிறேன். சிரசாசனத்தை தற்போது எனது கணவனின் உதவியுடன் செய்கிறேன். கர்ப்ப காலத்திலும் யோகாசனங்களை செய்வது மகிழ்ச்சியளிக்கிறது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.