ஜோதிகா, கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து OTTல் வெளியாகும் யோகிபாபு படம் !

V4U MEDIA [ Mon, Jun 29, 2020 ]

4

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் திரையரங்கு, மால்கள் என அனைத்தும் கடந்த மூன்று மாதங்களாக மூடப்பட்டிருப்பதால் ரிலீசுக்கு தயாராக இருக்கும் சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் ரிலீஸாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழில் முதல் படமாக நடிகை ஜோதிகாவின் 'பொன்மகள் வந்தாள்' திரைப்படம் மே 29-ஆம் தேதி மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள பெண்குயின் திரைப்படம் அமேசானில் ஜூன் 19 ஆம் தேதி ரிலீஸ் ஆகி மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த நிலையில் 'காக்டெய்ல்' திரைப்படத்தையும் ஓடிடி பிளாட்பாரத்தில் வெளியிட முடிவு செய்துள்ளனர். யோகிபாபு நடிப்பில் உருவான ''காக்டெய்ல்'' என்ற திரைப்படம் ஜூலை 10 அன்று ஜீ-5 ஓடிடி பிளாட்பாரத்தில் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Image


Latest News