"அந்தகாரம்" படத்திலிருந்து வெளியானது "யார்தான் கண்டாரோ" பாடல் !!

V4U MEDIA [ Sat, Nov 21, 2020 ]

144

பல சின்ன பட்ஜெட் படங்கள் OTT-ல் வெளியாகி நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் பல தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு கொண்டு தங்கள் படங்களை OTT-ல் வெளியிட முடிவு செய்துள்ளனர். அந்த வரிசையில் அடுத்ததாக OTT-ல் வரவிருப்பது பிரபல பிரம்மாண்ட இயக்குனர் அட்லீ தயரித்துள்ள 'அந்தகாரம்' . இந்த படத்தை நேரடியாக நெட்பிளிக்ஸில் ரிலிஸ் செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.

இயக்குனர் அட்லி தயாரிப்பில் விக்னேஷ் ராஜன் இயக்கியுள்ள திரைப்படம் 'அந்தகாரம்'. இப்படத்தில் வினோத் கிஷன் மற்றும் 'கைதி' புகழ் அர்ஜுன் தாஸ், பூஜா, குமார் நடராஜன் என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரைலர் மற்றும் போஸ்டர் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. ஊரடங்கு காரணமாக படம் ரிலீஸாவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் படத்தை OTT-ல் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர் படக்குழுவினர்.

அர்ஜுன் தாஸ் கைதி படம் தமிழ் சினிமாவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். கைதி திரைப்படத்தில் கம்பீரமான குரலில் பேசும் அவரது குரலுக்காகவே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார். தற்போது இவர் வளர்ந்து வரும் முன்னணி ஹீரோவாக உருவெடுத்து வருகிறார். இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

தற்போது தளபதி விஜய் யின் "மாஸ்டர்" படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து இயக்குனர் அட்லீ தயாரிப்பில் "அந்தகாரம்" என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்தை வி.விக்நராஜன் என்பவர் இயக்குகிறார்.


Image

இந்த படம் நவம்பர் 24ம் தேதி நெட்பிளிக்ஸில் ஒளிபரப்பாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஏற்கனவே வெளியிட்டுள்ளனர். இப்படத்தின் ட்ரைலர்-1 மற்றும் டிரைலர்-2 ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று (நவம்பர் 20) அந்தகாரம் படத்திலிருந்து "யார்தான் கண்டாரோ" பாடல் வெளியாகியுள்ளது. சிவம் அவர்களின் பாடல் வரிகளில், அவரது குரலிலுமே வெளியாகி இருக்கும் இந்தப் பாடல் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Tags : Cinema

Latest News