ப்ளீஸ் ! அடுத்தவங்களோட கம்பேர் பண்ணாதீங்க - தக்க பதிலடி கொடுத்த நடிகர் விவேக்

V4U MEDIA [ Wed, Aug 12, 2020 ]

161

பல பிரபலங்களும் "கிரீன் இந்தியா" சேலஞ்சில் மரக்கன்றுகளை நட்டு அந்தப் புகைப்படங்களைத் தங்களின் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். 

இந்த நிலையில் நடிகர் மகேஷ் பாபு, இரண்டு தினங்களுக்கு முன் தனது பிறந்த நாளை முன்னிட்டு இந்த சேலஞ்சில் மரக்கன்றுகளை நட்டு அந்த வீடியோவை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த சவாலை ஜூனியர் என். டி. ஆர், தளபதி விஜய் மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோரையும் செய்யுமாறு தன் டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். தளபதி விஜய் இந்த சவாலை ஏற்பாறா இல்லையா என கேள்வி எழுந்த நிலையில் அவர் அந்த சவாலை ஏற்று கொண்டுள்ளார். 

தளபதி விஜய் இன்று அவரது வீட்டு தோட்டத்தில் செடி நட்டு அந்த புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில் " மகேஷ் பாபு இது உங்களுக்காக. பசுமையான இந்தியா உருவாக்குவோம். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் " என ட்வீட் செய்துள்ளார். இதற்கு ரிப்ளை செய்த சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு " சவாலை ஏற்று செய்ததற்கு ரொம்ப நன்றி விஜய் ப்ரோ ! பத்திரமாக இருங்கள் " என கூறியுள்ளார். தளபதி விஜய் மற்றும் சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு அவர்களின் ரசிகர்கள் அனைவரும் இதை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து மகிழ்கின்றனர்.

Vijay accepts Mahesh Babu's Green India Challenge, fans hail the ...

ஆனால் வழக்கம் போல இதையும் குறை கூறி வருகிறார் மீரா மிதுன். ரசிகர்கள் எவளோ திட்டினாலும் சரி இயக்குனர் பாரதிராஜா கூறியும் திருந்தாத ஜென்மம் இன்று தளபதி விஜய் போஸ்ட் செய்ததும் இதை விவேக் எப்போதோ செய்து விட்டார் என்று குறை கூறி அழுது உள்ளார். 

இதற்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார் நடிகர் விவேக் " மகேஷ் பாபு சார், தளபதி விஜய் சார் இருவருக்குமே கோடிக்கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இயற்கைக்காக ஏதாவது ஒரு நல்ல விஷயத்தை செய்தால் ரசிகர்களும் அதை பின்தொடர்ந்து நல்ல காரியங்களை செய்வார்கள். நாம் இதனை வரவேற்க வேண்டும். தயவு செய்து ஒருவரை இன்னொருவருடன் ஒப்பிடாதீர்கள். நம்முடைய இலக்கு பசுமையான பூமி மட்டுமே'' என பதிவிட்டுள்ளார்.


Tags : Cinema

Latest News