பெண் குழந்தைக்கு தந்தையானார் விராட் கோலி !!

V4U MEDIA [ Mon, Jan 11, 2021 ]

97

இந்திய கிரிக்கெட் வீரராக இருந்து இந்தியா கிரிக்கெட் அணியின் கேப்டனாக உயர்ந்தவர் விராட் கோலி. சச்சின், தோனிக்கு பின் உலகம் முழுவதும் அதிக கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்தவர். இளம் பெண்களின் ஹேண்ட்சம் ஹீரோ. விளம்பர படங்களில் நடித்த வருடத்திற்கு பல நூறு கோடிகள் சம்பாதிக்கும் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையும் இவருக்கு உள்ளது. மாடல்கள், அழகிகள் என பலரும் போட்டி போட்டு முயன்றும், பாலிவுடின் முன்னணி நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சுமார் மூன்று ஆண்டுகள் கழித்து அனுஷ்கா சர்மா இந்த கொரோனா லாக்டவுனில் கர்ப்பிணியானார். 2021 ஜனவரி மாதம் குழந்தை பிறக்கவுள்ளது என விராட் கோலி முன்னரே தனது சமூக வலைத்தளங்களில் தெரிவித்திருந்தார். மேலும், ஜனவரியில் நாங்கள் 3 பேர் என பதிவிட்டு மனைவி அனுஷ்கா கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்திருந்தார்.

இதையடுத்து நிறைமாத கர்ப்பிணியான அனுஷ்கா குழந்தைக்கு ஆரோக்கயமான விஷயங்களில் கவனத்தை செலுத்தி வந்தார். குறிப்பாக சமீபத்தில் 9 மாத கர்பத்துடன் தலை கீழாக நின்று யோகா செய்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

இந்நிலையில் இன்று (ஜனவரி 11) மதியம் விராட் கோலி & அனுஷ்கா ஷர்மா தம்பதிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளதை மகிழ்ச்சியுடன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார் விராட் கோலி. அவருக்கு நண்பர்கள், சக இந்தியா கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Tags : Cinema

Latest News