பட்டகத்தியால் கேக் வெட்டிய விவகாரம் ! விளக்கம் அளித்த விஜய் சேதுபதி !

V4U MEDIA [ Sat, Jan 16, 2021 ]

153

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருகிறார் விஜய் சேதுபதி. இவரை மக்கள் செல்வன் என ரசிகர்கள் செல்லமாக அழைக்கின்றனர்.

சமீபத்தில் தளபதி விஜய் யுடன் நடித்த மாஸ்டர் திரைப்படம் உலகம் முழுவதும் மாபெரும் வெற்றி பெற்றது. திரையரங்கில் வெற்றிநடை போட்டு வருகிறது. பவானி கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இன்று (ஜனவரி 17) தனது பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடுகிறார் விஜய் சேதுபதி. இந்த சந்தோஷமான நேரத்தில், சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

"எனது பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ள திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி. இதனை முன்னிட்டு 3 நாட்களுக்கு முன்பு எனது அலுவலகத்தில், பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் விவாதத்துக்கு உள்ளாகி இருக்கிறது. அதில் பிறந்த நாள் கேக்கினை பட்டாக் கத்தியால் வெட்டியிருப்பேன். தற்போது பொன் ராம் சார் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்கவுள்ளேன். அந்தப் படத்தின் கதைப்படி ஒரு பட்டாக் கத்தி முக்கிய கதாபாத்திரமாக இருக்கும். ஆகையால், அந்தப் படக்குழுவினருடன் பிறந்த நாள் கொண்டாடும்போது அதே பட்டாக் கத்தியை வைத்து கேக்கினை வெட்டினேன். இது ஒரு தவறான முன்னுதாரணம் என்று பலரும் கருத்து தெரிவித்து விவாதமாகி உள்ளது. இனிமேல் இது போன்ற விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இந்தச் சம்பவம் யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன்". என தெரிவித்துள்ளார்.

நன்றி
விஜய் சேதுபதி

Latest News