பிரபு தேவாவின் பகீரா படத்தில் நடிக்கும் மற்றொரு கதாநாயகி!! யார் தெரியுமா??

V4U MEDIA [ Mon, Mar 30, 2020 ]

பாகீரா என்ற திரைப்படத்திற்காக நடிகரும் இயக்குநருமான பிரபு தேவா, த்ரிஷா இல்லனா நயன்தாரா மற்றும் அன்பானவன் அசாராதவன் அடங்காதவன் படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் கைகோர்த்துள்ளதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

கோகுளம் தயாரிப்பு நிறுவனம் சார்பாக கோபாலன் தயாரிக்கும் பாகீரா ஒரு காதல் த்ரில்லர். சமீபத்தில் வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் பிரபு தேவாவின் போஸ்டர் ரிலீஸ் ஆனது. மேலும் இந்த படத்தில் மூன்று கதாநாயகிகள் என்று கூறப்படுகிறது.


அனேகன் கதாநாயகி அமிரா தஸ்தூர் கதாநாயகி கதாபாத்திரங்களில் ஒருவராக இருப்பார் என்று கூறப்பட்டாலும், சமீபத்திய புதுப்பிப்பு என்னவென்றால், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும், புரியாத புதிர் போன்ற திரைப்படங்களுக்கு பெயர் பெற்ற காயத்ரி பாகீராவில் மற்றொரு முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.