ஹீரோவிற்கு சம்பளம் இல்லை ! தமிழ் சினிமாவின் புதிய முயற்சியில் களமிறங்கும் விஜய் சேதுபதி

V4U MEDIA [ Fri, May 22, 2020 ]

55

கொரோனா வைரஸ் தொற்றால் படப்பிடிப்புகள் நடைபெறாமல் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக முடங்கியுள்ளது. மிக அதிகமாக பாதிக்கப்பட்டது சினிமாத்துறை என்றே சொல்லலாம்.

இனி வரும் காலங்களில் சினிமா தயாரிப்பு முறைகளில் பெரிய மாற்றம் வரும் என நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் மற்றும் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி ஆகியோர் கூட்டணியில் 2 கோடி ரூபாய் செலவில் புதிய படம் ஒன்று தயாரிக்கப்பட உள்ளது.

கதையின் நாயகனாக சத்யராஜ் மற்றும் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளனர் பார்த்திபன் மற்றும் விஜய் சேதுபதி. இப்படத்தை பிரபல இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கவுள்ளார்.

இந்த படத்தில் பணிபுரியும் நடிகர்கள் யாருக்கும் சம்பளம் கிடையாது. சொன்ன பட்ஜெட்டில் படத்தை முடித்து விட்டு ரிலீஸுக்கு பின் பிசினஸ் செய்து வரும் பணத்தில் அவரவரின் மார்க்கெட் மதிப்புக்கு ஏற்ப தொகை பிரித்து அளிக்கப்படும். மேலும் படத்தின் பட்ஜெட்டான 2 கோடியை 200 பங்குகளாகப் பிரித்து விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன் மூலம் ஒருவர் அதிகபட்சமாக 10 பங்குகளை வாங்கி கொள்ளலாம் என சொல்லப்படுகிறது. தமிழ் சினிமாவின் இந்த புதிய முயற்சிக்கு அணைவரிடமிருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

Latest News