‘அக்னிச் சிறகுகள்’ படத்தின் FirstCharacterLook வெளியானது..!

V4U MEDIA [ Thu, Nov 21, 2019 ]

10 10 10 10 10

நடிகர்/ இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மற்றும் நடிகர் அருண் விஜய் இணைந்து நடிக்கின்ற அக்னிச் சிறகுகள் திரைப்படத்திலிருந்து முக்கியக் கதாப்பாத்திரத்தின் ஒரு ஃபிர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளனர்.

மூடர் கூடம் திரைப்பட இயக்குனரான நவீன் மாதவ் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி இணைந்து நடிக்கின்ற படம் தான் ‘அக்னிச் சிறகுகள்'. இந்த படத்தை அம்மா க்ரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் டி.சிவா தயாரிக்கிறார். இந்த படத்தில் நடிகை அக்க்ஷரா ஹாசன், நடிகர் பிரகாஷ் ராஜ், நாசர், நடிகர் தலைவாசல் விஜய் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். கப்பல், ஒரு கன்னியும் மூன்று களவாணியும், என்கிட்ட மோதாதே, இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு, மூடர் கூடம் ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்த நடராஜன் சங்கரன் என்பவர் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

Here is the #FirstCharacterLook 

கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த படத்தின் டைட்டில் ஃபிர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் கமல் ஹாசன் அவர்கள் வெளியிட்டார். அதன் பின்னர் இந்த படம் குறித்து தகவல் ஏதும் வரவில்லை. இந்த நிலையில், இந்த படத்திற்கான முன்னேற்றமாக இப்படத்தில் நடிகர் விஜய் ஆண்டணி கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை போஸ்டர் ஒன்றை இந்த படத்தின் இயக்குனர் நவீன் மாதவ் நேற்று வெளியிட்டார். மேலும், இன்று அதே ஃபர்ஸ்ட் கேரக்டர் லுக் போஸ்டரை தெலுங்கில் நடிகர் விஜய் ஆண்டனி வெளியிட்டார்.Latest News