நடிகர் சூர்யாவுடன் விமானத்தில் பறந்த 100 அரசு பள்ளி மாணவர்கள் !

V4U MEDIA [ Thu, Feb 13, 2020 ]

243

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் "சூரரைப் போற்று" ரிலீஸ்க்கு தயாராக உள்ளது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்தின் முதல் மாறா தீம் மியூசிக் பாடல் வெளியானது. தற்போது படத்தின் இரண்டாவது பாடலை இன்று வெளியிட்டனர். 

விமான நிறுவனம் தொடங்குவது தொடர்பான கதை களத்தில் சூர்யா நடிப்பதால் SPICE ஜெட் விமான நிறுவனத்துடன் இணைந்துள்ளது. மேலும் விமானத்தில் சூரரைப் போற்று படத்தின் போஸ்டரை வண்ணம் பூசி விளம்பரப்படுத்துகிறார்கள். இந்த பாடல் வெளியீட்டுக்காக இதுவரை விமானத்தில் செல்லாத 100 குழந்தைகளை விமானத்தில் அழைத்து சென்றிருக்கிறார்கள் படக்குழுவினர்.

சூர்யாவின் அகரம் பவுண்டேசன் சார்பில், கட்டுரை போட்டி நடத்தப்பட்டது. போட்டியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100 குழந்தைகளும் விமானத்தில் செல்ல தேர்வு செய்யப்பட்டிருந்தார்கள். சிறுவர்களின் கனவை நிறைவேத்தியுள்ளார் சூர்யா.

Latest News