ஆடை படத்தில் தெய்வீக பாடல் பாடும் பிரபல பாடகி!!

V4U MEDIA [ Thu, Jul 11, 2019 ]

ஆடை படத்தில் தெய்வீக பாடல் பாடும் பிரபல பாடகி!!


அமலா பால் நடிப்பில் 'மேயாத மான்' இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் வெளிவர இருக்கும் படம் ஆடை. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளிவந்து மக்களின் கவனத்தை ஈர்த்தது. அண்மையில் வெளியான இப்படத்தின் டீஸர் அதிக வியூஸை அள்ளியுள்ளது. இந்த படத்திற்கான வரவேற்பும் அதிகரித்து வருகிறது. 


கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் படங்களின் வரிசையில் ஆடை படமும் இடம் பெறுகிறது. இந்த படத்தில் அமலா பால் அவர்கள் ஆடை இல்லாமல் ஒரு காட்சியில் நடித்திருக்கிறார். ஆகையால் இந்த படத்திற்கு 'ஏ" சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் டீசரும் டிரைலரும் பிரபல இயக்குனர்கள் கரண் ஜோகர் மற்றும் அனுராக் கஷ்யப் வெளியிட்டனர். இதை தொடர்ந்து தற்போது இந்தப்படத்தில் பழம்பெரும் பாடகி பி.சுசீலா அவர்கள் ௭௦ வருடங்களுக்கு முன்பு முதல் முறை பாடப்பட்ட தெய்வீக பாடலை இந்த படத்தில் அவருடைய குரலிலே பாட உள்ளார். இது இந்த திரைப்படத்திற்கு மேலும் மெருகேற்றுகிறது. இந்த படம் ஜூலை 19ஆம் தேதி வெளியாகிறது.

Latest News