கமலஹாசனை அறிமுகப்படுத்திய பிரபல தயாரிப்பாளர் காலமானார் !

V4U MEDIA [ Fri, May 22, 2020 ]

73

உலகநாயகன் கமல்ஹாசனை 'பட்டாம்பூச்சி' என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்தியவர் தயாரிப்பாளர் ரகுநாதன் . இவர் வரப்பிரசாதம், நீ வாழவேண்டும், அக்னிப்பிரவேசம், ராஜராஜேஸ்வரி, இனி வரும் காலம் என பல படங்களை தயாரித்துள்ளார். இவரது இயக்கத்தில் பிரபல நடிகர்கள் பிரபு, சுரேஷ், பாண்டியன் ஆகியோர் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இவரது தயாரிப்பில் உருவாகியுள்ள 'மரகதக்காடு' படம் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது.

இந்நிலையில் 45 ஆண்டுகளாக சினிமாவில் பயணித்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ரகுநாதன் உடல்நல குறைவால் நேற்று காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.Latest News