அனைத்து சாதனைகளையும் முறியடித்த நடிகர் "சுஷாந்த் சிங்"கின் "தில் பேச்சாரா" ட்ரைலர் !

V4U MEDIA [ Tue, Jul 07, 2020 ]

53

பாலிவுட் உலகில் பிரபல இளம் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் சில வாரங்களுக்கு முன்பு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஒட்டு மொத்த இந்தியாவும் இந்த சம்பவத்தால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Image

சுஷாந்த் சிங் இறப்பதற்கு முன்பாக நடித்த படம் 'தில் பேச்சாரா'. இப்படம் மே மாதமே ரிலீஸ் ஆகவேண்டிய நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக ரிலீஸ் தள்ளி போனது. 


Image

சமீபத்தில் இந்த படம் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஜூலை 24ம் தேதி ஹாட்ஸ்டாரில் இந்த படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுஷாந்த் சிங் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் இப்படத்தை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். 

Image

 
இந்நிலையில் நேற்று இப்படத்தின் ட்ரைலர் யூடியூபில் வெளியாகி அனைவரது கவனத்தையும் பெற்றவுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். இந்த ட்ரைலர் இணையத்தில் வெளிவந்து பல சாதனைகளை செய்து வருகிறது. தற்போது இந்த ட்ரைலர் வெளிவந்த சில மணி நேரத்தில் 4 மில்லியன் லைக்ஸுகளை பெற்று பிரம்மாண்ட சாதனையை நிகழ்த்தியுள்ளது. இதன் மூலம் குறைந்த நேரத்தில் உலகளவில் இவ்வளவு லைக்ஸ் பெற்ற ட்ரைலர் சாதனையை சுஷாந்த் படைத்துள்ளார்.

Tags : Cinema

Latest News