நடிகர் தனுஷ் நடித்த அசுரன் படத்தின் கன்னட ரீமேக்கில் சிவசாமியாக களமிறங்கும் பிரபல நடிகர்!!

V4U MEDIA [ Wed, Mar 25, 2020 ]

\

நடிகர் தனுஷ் கடந்த ஆண்டு இயக்குனர் வெற்றிமாறனுடன் நான்காவது முறையாக அசுரன் படத்தில் இணைந்தார், இப்படத்தை கலைப்புலி எஸ் தானு தயாரித்தார்.

அக்டோபரில் வெளியான, பூமனி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படத்தில் மஞ்சு வாரியர், கென் கருணாஸ், அம்மு அபிராமி ஆகியோரும் நடித்து சூப்பர்ஹிட் ஆனது. அசுரன் தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேஷ் மற்றும் பிரியாமணி நடிக்கின்றனர் நாரப்பா என்று தலைப்பிட்டுள்ளனர்.

அசுரனின் கன்னட ரீமேக்கில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவா ராஜ்குமார் தனுஷின் கதாபாத்திரத்தில் நடிக்கக்கூடும், இந்த ரீமேக்கை இயக்குவது ஜேக்கப் வர்கீஸ். அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது. சிவா ராஜ்குமாரின் யோகியின் ரீமேக்காக இருந்த பரட்டை என்கிற அழகு சுந்தரம் படத்தில் 13 ஆண்டுகளுக்கு முன்பு தனுஷ் நடித்தார் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.


Latest News