தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

V4U MEDIA [ Sat, Apr 03, 2021 ]

77

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும்: 11 நகரங்களில் சதமடித்த வெப்பநிலை…!!

தமிழகத்தில் 11 நகரங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெப்பநிலை பதிவாகியுள்ளது. கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், கோடை வெயிலின் அளவு நாளுக்கு நாள் தீவிரம் அடைகிறது.மேலும், வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதால் தரைப்பகுதியை நோக்கி வெப்பக் காற்று வீசுகிறது. அதனால், தமிழக நிலப்பகுதிகளில் ஈரப்பதம் குறைந்து, மிகவும் வறண்ட வானிலை நிலவுகிறது. நாளை மறுதினம் வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இயல்பை விட 6 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக வெப்பம் பதிவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

நேற்று மாலை நிலவரப்படி, தமிழகத்தில் அதிகபட்சமாக வேலுாரில், 43 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது. சென்னை நுங்கம்பாக்கம், கடலுார், தர்மபுரி, கரூர் பரமத்தி, மதுரை, மதுரை விமான நிலையம், நாகை, பரங்கிப்பேட்டை, சேலம், திருச்சி, திருத்தணி ஆகிய நகரங்களிலும், புதுச்சேரியிலும், 38 டிகிரி செல்ஷியசுக்கு அதிகமாக வெயில் பதிவாகியுள்ளது.

Tags : Others